தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலக்ஷ்மியின் திருமண கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு சமூக ஊடகங்களின் ட்ரெண்டிங்க் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது.பிரதமர் உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்தியாவின் பெரும் நடிகர்கள் என அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் தாய்லாந்தில் திருமணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில் சென்னையில் திருமண வரவேற்புக்கு அழைப்பு வைக்கப்பட்டிருந்தது.அந்த வகையில் நேற்று திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் அழைப்பை மறுக்காத திரைதுறை பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர் வரை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் எடுக்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
Listen News!