• Oct 05 2024

இன்னும் சில நாள் தான்.. ரூ.1000 கோடியை நெருங்குகிறது ‘கல்கி 2898 ஏடி’.. நேற்று வரை எவ்வளவு?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்களையும் அவ்வப்போது தயாரிப்பு தரப்பு வெளியிட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்ததாக கூறப்பட்டது. பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களுக்குப் பிறகு தென்னிந்திய திரைப்படம் ஒன்று 700 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்றும் இந்த படம் தென்னிந்திய திரை உலகின் ஒரு சாதனை படமாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.

மகாபாரத கதையை தற்போதைய சயின்ஸ் பிக்சனுடன் இணைத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக நாக் அஸ்வின் இயக்கியுள்ள நிலையில் இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த படமாக அமைந்துள்ளது. அதனால் தான் இந்த படம் தொடர்ந்து வசூலை குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பிரபாஸ் நடித்த ’சாஹோ’, ’ராதே ஷ்யாம்’, ’ஆதி புருஷ்’, ’சலார்’ உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் பெற்றதை அடுத்து மீண்டும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் என்பதை பிரபாஸ் நிருபித்துள்ளார் என்று கூறப்படுகிறது.


Advertisement

Advertisement