• Apr 26 2024

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்ட நீதிபதி- உப்பென்னா பட விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவான திரைப்படம் தான் உப்பென்னா'.இப்படத்தை இயக்குநர் புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இயக்கியிருந்ததோடு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அதை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை, விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது. 


இந்நிலையில் தனது கதை திருடப்பட்டு உப்பெனா படம் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த எஸ்.யு.டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில்தான் உருவாக்கிய 'உலகமகன்' என்ற கதையை தர்மபுரியை சேர்ந்த சம்பத்  என்ற உதவி இயக்குநரிடம் கடந்த 2015ஆம் ஆண்டு சொல்லி இருந்ததாகவும், சம்பத்துக்கு அனுப்பிய  'உலகமகன்'  கதை திருடப்பட்டு, தெலுங்கில் உப்பெனா என்ற படமாக உருவாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

உப்பென்னா படத்தின் கதை தன்னுடையது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனக்கு வழங்க  உத்தரவிட வேண்டும் எனவும் அதன் தமிழ் ரீமேக்கை விஜய் சேதுபதி பட நிறுவனம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக விஜய் சேதுபதி பட நிறுவனம் மற்றும் தெலுங்கில் படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ், இயக்குநர் புஜ்ஜி பாபு சனா  ஆகியோர்  பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 


அப்போது விஜய் சேதுபதி சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, உப்பென்னா திரைப்படத்தை  தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தான் வாங்கவில்லை என்றும், அதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை நாளை தள்ளி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement