• Feb 04 2023

'துப்பாக்கி' படத்தில் விஜய்க்குத் தங்கையாக நடித்த நடிகையா இது.. ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே..!

Listen News!
Prema / 1 month ago
image

Advertisement

Listen News!

'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்று தமிழ் சினிமாவின் தலை சிறந்த நாயகனாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் எந்தப் படம் உருவானாலும் அதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அதேபோன்று இவருடன் இணைந்து நடிப்பவர்களையும் நம்மால் மறக்க முடியாது.


அந்தவகையில் ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் முதல் முறையாக வெளிவந்த திரைப்படம் தான் 'துப்பாக்கி'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து அசத்தி இருந்தார். விஜய்யின் உடைய திரை வாழ்க்கையில் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் படமாக துப்பாக்கி படம் அமைந்து காணப்படுகிறது.


இப்படத்தில் விஜயுடன் இணைந்து அவருக்குத் தங்கையாக இரு நடிகைகள் நடித்திருந்தனர். இதில் இளைய தங்கையாக நடித்திருந்தவர் பெயர் தான் சஞ்சனா சாரதி. இவர் 'என்றென்றும் புன்னகை, எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது நடிகை சஞ்சனா சாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன  அடையாளம் தெரியாமல் மாறி விட்டார் எனக் கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..!


Advertisement

Advertisement

Advertisement