• Oct 13 2024

பாலியல் வழக்கில் கைதாகும் ஜானி மாஸ்டர் மனைவி! எதனால் தெரியுமா? சுடசுட வந்த நியூஸ்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடன இயக்குனர் ஜானி தனது குழுவில் பணியாற்றிய மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்திலும் இது தவிர வேறு மூன்று பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


அதே சமியம் ஜானி மாஸ்டரின் மனைவி அயிஷா தனது கணவர ஒரு அப்பாவி என்றும் அவர் விரைவில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை துடைத்தெறிந்து விட்டு வெளியே வருவார் என்றும் கூறியிருந்தார்.


அப்படி அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு பிரிந்து செவ்வவும் தயார் என்று சத்தியம் செய்யாத குறையாக பேசி இருந்தார். ஆனால் தற்போது இதே வழக்கில் அவரும் விரைவில் கைது செய்யப்பட இருக்கிறார் என்ற ஒரு தகவல் காவல் துறை வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது.


சம்பந்தப்பட்ட அந்த மைனர் டான்சரை ஜானி மாஸ்டரிடம் இணங்கி செல்லுமாறும் அதன் பிறகு அவரை மதம் மாற்றி ஜானி மாஸ்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் கூறி அயிஷா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து அவரும் விரைவில் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement