• Dec 06 2024

அதிகபட்ச மக்கள் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட இலங்கையின் 9வது ஜனாதிபதி யார் தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் நேற்று நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. முன்னனர் ரணில் விக்ரம சிங்க ஜனாதிபதியாக இருந்த நிலையில் தற்போது நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் "அநுரகுமார திசாநாயக்க" தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


ஜனாதிபதி தேர்தலுக்காக பலர் போட்டியிட்ட நிலையில் அதிகபட்ச மக்கள் வாக்குகளினால் இவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதியாக அநுர குமார நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.


இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்ட போதும் அநுர அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு அரசியல்வாதிகளும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement