• Jan 18 2025

எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச கோவில்.. ஸ்ரீதேவி தங்கையுடன் சென்னை கோவிலில் ஜான்வி கபூர்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நேற்று ஐபிஎல் இறுதி போட்டி பார்ப்பதற்காக சென்னை வந்த நிலையில் இன்று அவர் ஸ்ரீதேவியின் சகோதரியுடன் சென்னையில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றதாகவும், அந்த கோயில் தனது அம்மாவுக்கு ரொம்ப பிடித்த கோயில் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபலம் என்பதும் தற்போது அவர் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  ஜான்விகபூர் நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க சென்னைக்கு வந்த நிலையில் தனக்கு பிடித்தமான நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணி கோப்பையை வென்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

இந்த நிலையில் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி’ என்ற திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ஹீரோவுடன் அவர் நேற்று ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது. 

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் தங்கை முறை உறவான நடிகை மகேஸ்வரி உடன் ஜான்வி கபூர் முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். சென்னையில் உள்ள இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது என்று தனது அம்மா கூறி இருப்பதாகவும் தனது அம்மாவுக்கு இந்த கோயில் மிகவும் பிடித்தமான இடம் என்றும் தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




Advertisement

Advertisement