விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் ஆறு நாட்களில் முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பைனல் இந்த வாரம் நடைபெற உள்ளது. அதில் ஜாக்குலின், சௌந்தர்யா, முத்துக்குமரன், ரயான், விஷால் மற்றும் பவித்ரா ஆகிய 6 போட்டியாளர்களே நுழைந்து உள்ளார்கள்.
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி பைனல் வரை செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தீபக்கும் அருணும் எதிர்பாராத விதமாக எலிமினேட் ஆகி வெளியே சென்றார்கள். இது ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.
இதற்கு இடையில் பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியே சென்ற எட்டு பேர் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் வெளியுலகில் நடக்கும் சில விஷயங்களை எக்கச்சக்கமாக லீக் பண்ணியதால், இதில் கோபப்பட இந்த பிக்பாஸ் அவர்களுக்கு வார்னிங் கொடுத்ததோடு இனி இவ்வாறு வெளி உலக விஷயங்களை பேசினால் வெளியேற்றி விடுவேன் என்றும் எச்சரித்தார்.
d_i_a
இதை தொடர்ந்து இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டுக்கள் தர்ஷிகா என்ட்ரி கொடுத்திருந்தார். அவரது வரவை பார்த்ததும் விஷால் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மேலும் ரவீந்திரனுடன் தர்ஷிகா வாக்குவாதப்பட்ட ப்ரோமோவும் இன்றைய தினம் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், பிக்பாஸ் போட்டியாளரும் காமெடி நடிகருமான கூல் சுரேஷ், எங்க வீட்டு மருமகள் சௌந்தர்யா தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப் போகின்றார் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தற்போது அவருடைய வீடியோ வைரலாகி உள்ளது.
இதன்போது கூல் சுரேஷ் கூறுகையில், பிக்பாஸ்சீசன் 8 டைட்டிலை வெற்றி பெற போவது யாரு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் நிச்சயமாக எங்கள் வீட்டு மருமகள் சௌந்தர்யா தான் வெற்றி பெறுவார்.
கூல் சுரேஷுக்கும் சௌந்தர்யாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால், என்னுடைய தம்பி விஷ்ணு பிக்பாஸில் என்னுடன் கலந்து கொண்டிருந்தார்.
அவர் திருமணம் செய்ய போகும் பொண்ணு என்ற வகையிலும், சௌந்தர்யாவுக்கு இருக்கும் பேராதரவினாலும் அவன் தான் இந்த டைட்டிலை வின் பண்ணுவார் என கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய வீடியோவை வருகின்றது.
Listen News!