• Jan 19 2025

முத்துகூட சேர்ந்து ரோகிணியின் சந்தோசத்தை கெடுக்கும் ஜீவா..! இது நல்ல ட்விஸ்டா இருக்கே ..

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெற்றுள்ளது.இதை தொடர்ந்து இதில் நடிக்கும் நடிகர்களை பிரபல சேனல்களும் போட்டி போட்டு பேட்டி எடுத்து வருகின்றது.

அதன்படி அண்மையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்த சல்மா அருணை பேட்டி எடுத்த நிலையில், தற்போது ஜீவா கேரக்டரில் நடித்து வரும் அச்சயா பாரதியைபேட்டி எடுத்துள்ளார்கள். 

இந்த நிலையில், ஜீவா கேரக்டரில் நடிக்கும் நடிகை அச்சயா பாரதி சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

சிறகடிக்க ஆசை சீரியல் ஆடிஷனுக்கு போனபோது என்னுடன் பல பேர் இருந்தார்கள். எனக்கு சற்று தயக்கம் இருந்தபோதிலும் எதுவானாலும் பார்ப்போம் என்ற நம்பிக்கையிலேயே சென்றேன். ஆனாலும் எனது இயல்பான நடிப்பை பார்த்து டைரக்டர் ஓகே பண்ணி விட்டார். நான் ஆடிஷனுக்கு போனா அதே டைம் தான் தற்போது மனோஜாக நடிக்கும் ஸ்ரீதேவ் வந்திருந்தார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலிலும் நான் நடித்துள்ளேன், ஆனால் அந்த சீரியலில் ஒன்றை வருஷமாக நடித்த போதும் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம் எனக்கு கிடைக்கவில்லை. சிறகடிக்க ஆசை சீரியலில் 27 லட்சத்தை எடுத்து ஓடிப்போன பொண்ணு நீங்க தானே எல்லாரும் என்னை  கேட்பார்கள். ஆனாலும் எனக்கு சந்தோசமாகவே காணப்படும். காரணம் அந்த அளவுக்கு நான் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டேன் என்று.


நீண்ட நாளாகவே எனக்கு ஆசை இருந்தது. மக்கள் மத்தியில் சின்ன வரவேற்பு சரி கிடைக்காத என்று.. ஆனால் இந்த சீரியலின் மூலம் அந்த ஆசை நிறைவேறி விட்டது.

மேலும் இனிவரும் எபிசோட்களின் கதை பற்றி சொல்ல முடியுமா எனக் கேட்க,  அது சத்தியமா முடியாது. ஏன்னா இன்னைக்கு நம்ம கைக்கு கிடைக்கிற ஸ்கிரிப்தான் நமக்கு என்ன என்று தெரியும். இதுல கதை நாளுக்கு நாள் மாறிக்கிட்டே இருக்கும். அதனால  சொல்ல முடியாது என்று சொல்லி உள்ளார்.

ஆனாலும் முத்து கூட சேர்ந்து ரோகிணியை பழிவாங்க சான்ஸ் கிடைத்தால் நான் தான் செய்வேன். மனோஜ், ரோகிணி அவங்களோட சந்தோஷத்தை கெடுப்பேன் அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement