• Jan 19 2025

ராகுல் - கேப்ரில்லா சீரியலில் இணையும் ‘சிறகடிக்க ஆசை நடிகர்’. பிக்பாஸ் போட்டியாளர் மனைவியுமா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் அடுத்தடுத்து பல சீரியல்கள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அந்த சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் சன் டிவியில் விரைவில் ஆரம்பிக்க உள்ள சீரியலில் ராகுல் மற்றும் கேப்ரில்லா, ஹீரோ ஹீரோயின் ஆக நடிக்க இருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மே 2ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் இந்த சீரியலின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதனை அடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடக்கும் என்றும் அனேகமாக ஜூன் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகுல்,  கேப்ரில்லா நடிக்கும் சீரியலில் இணையும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதலாவதாக ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் அப்பா கேரக்டரில் அடுத்த நரசிம்மராஜு இந்த சீரியலிலும் அப்பா கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. அவர் அனேகமாக கேப்ரில்லா அப்பாவாக நடிப்பார் என கூறப்படுகிறது. அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டனின் மனைவி சோபியா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



மேலும் ’அருவி’ சீரியலில் நடித்த ஜீவிதா, ஷாம் ஆகிய இருவரும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் ’கண்ணே கலைமானே’ சீரியலில் நடித்த துரைமணி ’மோதலும் காதலும்’ சீரியலில் நடித்த சந்தோஷ் உள்பட சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்போதைக்கு ராகுல், கேப்ரில்லா உட்பட 8 பேர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சீரியலின் டைட்டில் ’மருமகள்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சீரியலில் முன்னோட்ட வீடியோவும் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

Advertisement

Advertisement