• Oct 18 2024

ஹாரிஸ் இசையில் செம்மையாக வைப் பண்ணிய ஜெயம் ரவி! வெளியான பிரதர் பாடல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மிகப்பெரிய கலை குடும்பத்தில் பிறந்தவர்தான் ஜெயம் ரவி. இவருடைய அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது.

இதைத்தொடர்ந்து தமிழில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தீபாவளி, மழை, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை போன்ற ஹிட் படங்களை நடித்து நல்ல வரவைப்பை பெற்றார்.

அதன் பின்பு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை அடுத்து சைரன் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


இந்த நிலையில், பிரபல இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பிரதர் திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடித்து வரும் நிலையில், தற்போது அந்தப் படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இதோ அந்த பாடல்,


Advertisement