• Apr 27 2024

ஜெயம் ரவி-நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..எப்போது வெளியாகிறது தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.


அதுமட்டுமல்லாமல் ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.


மேலும் ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொண்டார் இவர். அடுத்து எம். குமரன் திரைப்படத்தில் நடித்தார். இதன் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.


இவர் அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.


இந்நிலையில் அப் படத்தை தொடர்ந்து இயக்குனர் அஹமத் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


இந்நிலையில், 'இறைவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் அஹமத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த படம் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement