• May 23 2025

ஹெனிஷாவுக்கு ஜெயம் ரவி விட்டு கொடுக்கிறார் ஆர்த்திக்கு மட்டும் ஏன் இல்லை?ஷர்மிளா கேள்வி?

Roshika / 11 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜெயம் ரவி. தற்போது சமூக வலைத்தளத்தில் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி  விவாகரத்து விடயம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வலம் வருகின்றது. இந்த நிலையில்  நடிகை ஷர்மிளா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில்  கலந்து கொண்டு கூறிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. 


நடிகை ஷர்மிளாவிடம்  நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது ஜெயம் ரவி குழந்தைகளுக்காக ஏன் விட்டு கொடுத்து போக கூடாது. இன்றைய கால கட்டத்தில் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்த பின்பு பிரியும் போது மனைவி மீது பல குற்றச்சட்டுகளை வைக்கின்றனர் எனக் கூறியிருந்தார். மேலும் கூறுகையில் ஜெயம் ரவி நல்ல முறையில் வளர்க்கப்படவர். அதனால் தான் ஆர்த்தியை விரும்பி திருமணம் செய்து கொண்டிருக்கலாம். ஹெனிஷா ஜெயம்ரவிக்கு மனைவியாக வந்ததாள் ரவியினுடைய அம்மா ,அப்பா ஏற்றுக்கொள்ளவர்களா? இல்லை என்றும் தனது குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல்  ஹெனிஷா வேண்டும் என்று கூறுவது சரியா?  என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.



மேலும் ஹெனிஷா பற்றிக் கூறுகையில் அவர் அணியும் ஆடைகள் மற்றும் அவரது காலச்சரம் பற்றியும் கூறியதோடு ஒரு கணவன் தனது மனைவி அரை குறை ஆடையுடன் வேறு ஆண்கள் மத்தியில் அனுமதிப்பானா? ஏன் ரவி ஜோசிக்க மாட்டாங்க என்றும் கூறியுள்ளார்.  ஹெனிஷாக்கு முன்பு இருந்தது போல தற்போதும் இருப்பதற்கு அனுமதித்து விட்டு கொடுத்து போகும் போது  ஏன் ஆர்த்தி கூட விட்டு கொடுக்க மாட்டார் என்பது தான் என்னுடைய கேள்வியாக இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆர்த்தி விட்டுக்கொடுத்து போகும் போது ஏன் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை.  ரவி கூட பேசுவதற்காகத்தான் இந்த 40 லட்ஷம் கேட்டிருப்பாங்க அவங்களுக்கு இந்த பணம் பெரிது இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 



மேலும் ஆர்த்தி ரவி கூட சந்தித்து பேசினா தங்களுக்குள் இருக்கும் பிரச்னையை தீர்த்து கொள்ள முடியும் என நம்புறாங்க  அதுமட்டுமல்லாமல் கணவன் மனைவி பிரச்னைக்கு மூன்றாவது நபர் தலையிடுவதன் மூலம் குடும்பத்தில் பிரச்சனை இருக்கும் என்று குறிப்பிட்டிருந்ததுடன்.இருவரும் தங்களது பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வதன் மூலம்  குடும்பத்தில் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement