• Jan 19 2025

ஜெயம் ரவி - கெனிஷாவின் நெருக்கமான உறவு உண்மை தான்! போட்டுடைத்த பிரபலம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக காணப்படும் தனுஷ், ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் தற்போது அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரை பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்திருந்தது.

தற்போது ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்து பிரச்சினை சூடு பிடித்துள்ளது. ஜெயம் ரவி தன்னை கேட்காமல் தான் விவாகரத்து முடிவை எடுத்தார் என்று ஆர்த்தி சொல்ல, ஆர்த்திக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பியாச்சு அவர்களுடைய வீட்டார்களுடன் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தது என்று ஜெயம் ரவி சமீபத்தில் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அதேபோல ஜெயம் ரவி பிரபல பாடகி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் பேசப்பட்டது. இதற்கும் பதிலடி கொடுத்திருந்தார்  ஜெயம் ரவி. அதன் பின்பு குறித்த பாடகி தனது இன்ஸ்டா  பக்கத்தில் ஆர்த்திக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார். இவ்வாறு மூவரும் மாறி மாறி தங்களது வேதனையை கொட்டி தீர்த்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் ஜெயம் ரவியின் விவாகரத்து பற்றி பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், ஜெயம் ரவி -  கெனிஷா இணைந்திருக்கும் புகைப்படத்தை வைத்து கிளம்பிய கிசுகிசுவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம்  விசாரித்த போது அதில் உண்மை இருப்பதாக சொல்கின்றார்கள்.


 முதலில் இந்த விவாகரத்தை ஆர்த்தி தான் டார்ச்சர் செய்தார். அதனால் ரவி வெளியே வந்துவிட்டார். ஆனால் இப்போது விசாரிக்கும் போது ரவிக்கு நெருக்கமான உறவு அந்த பாடகியுடன் உள்ளது என்றும்,  இரண்டு பேருமே கோவாவுக்கு சென்று தங்கி இருந்ததாக சொல்கின்றார்கள்.

 மேலும்  ரவியின் காரை கோவாவில் கெனிஷா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் முழுக்காரணமும் ஆர்த்தி தான் என்று சொல்லப்படுகின்றது.

இதில் குஷ்பூ தான் இருவரின் திருமணத்திற்கு முக்கிய காரணம் அவர் இறங்கி வந்து இரு தரப்பிலும் பேச வேண்டும் ஆனால் இப்போ எங்கே என்று தெரியவில்லை என அந்தணன்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement