• Nov 15 2025

லைக்கா நிறுவனத்தை காணவில்லையா?. கண்டு பிடிப்பவர்களுக்கு சன்மானம்? வைரல் போஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித் குமாருடன் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளதோடு இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சமீபத்தில் அர்ஜுன் வழங்கிய பேட்டியில், விடாமுயற்சி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்து முடித்தோம். தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் டிசம்பர் மாதத்தில் விடாமுயற்சி திரைக்கு வரும் என்று கூறியுள்ளார். ஆகவே விடாமுயற்சி திரைப்படம் டிசம்பர் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சமீபத்தில் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இந்த படத்தில் அஜித்குமார் கார் ரேஸ் ஓடிய  வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன.

இந்த நிலையில், சமூக வலைத்தள பக்கத்தில் விடாமுயற்சி படத்தின் டைட்டில் விடப்பட்டு 300 நாட்கள் ஆகிவிட்டது. படத்தோட அப்டேட் என்ன ஆச்சு? கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். என்றும் லைக்கா நிறுவனத்தை காணவில்லை என்றும் பேனர் அடித்து உள்ளார்கள். தற்போது குறித்த பேனர் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது..

Advertisement

Advertisement