• Jan 19 2025

சிறையில் இருந்து மிரட்டும் முன்னாள் காதலர்.. போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த நடிகை..

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் காதலர் தன்னை மிரட்டுவதாக பிரபல நடிகை ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ்  சந்திரசேகர் என்பவர் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் ஒருவர் பிரபல நடிகை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்றும் அவர் பல கோடிக்கு சுரேஷ் சந்திரசேகரனிடம் இருந்து பரிசு பொருளை பெற்றதாகவும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம் போலீசார் விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கும் சுரேஷ் சந்திரசேகர் தனக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதி வருவதாகவும் அந்த கடிதத்தில் தான் மிரட்டப்படுவதாகவும் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் புகார் அளித்துள்ளார். 


சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி மிரட்டல் விடுப்பது எனது தனிப்பட்ட உரிமைகளை பாதிப்பது மட்டுமின்றி நாட்டின் நீதி அமைப்பும் பாதிக்கப்படுவதாகவும் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 


மேலும் சிறையில் இருக்கும் ஒருவர் கடிதம் எழுதும் அளவுக்கு அவருக்கு எப்படி தகவல் தொடர்பு கிடைக்கிறது என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து டெல்லி போலீஸ் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement