• Aug 17 2025

பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்ட அழகில் ஜான்வி கபூர்.! வைரல் வீடியோ

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட், டோலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருவதோடு மட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவருடைய நடிப்பில் பரம் சுந்தரி படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.

2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் ஜான்வி கபூர் அறிமுகமானார். அதன் பின்பு சமீபத்தில் தேவரா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அடி எடுத்து வைத்தார். மேலும் ராம்சரண் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்திற்காக சுமார் ஆறு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.


ஜான்விக்கு முதன்மை வருமானம் நடிப்புதான் என்றாலும் அவர் பிரான்ட் ஒப்புதல்கள், விளம்பரங்கள் மற்றும் மாடலிங் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகின்றார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 82 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், மும்பையில் நடந்த தஹி ஹண்டி கொண்டாட்டங்களில் ஜான்வி கபூர் கலந்து கொண்டுள்ளார்.தற்போது சமூக வலைதள பக்கங்களில் ஜான்வி கபூரின் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.  அதில் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அவருடைய அழகு வர்ணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement