• Nov 23 2025

என்னைப் போன்றவனுடன் வாழ்வது எளிதல்ல... ஆனால் ஷாலினி... மனைவி குறித்து மனம் திறந்த அஜித்

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித் குமார், தனது எளிமை, ஒழுக்கம், மற்றும் உண்மைத்தன்மையால் ரசிகர்களின் இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். சினிமா உலகில் ‘தல’ என அழைக்கப்படும் அஜித், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில அரிய விஷயங்களை பகிர்ந்து, அனைவரையும் கவர்ந்துள்ளார்.


சமீபத்திய பேட்டியில் அவர் கூறிய வார்த்தைகள் அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. அதன்போது அவர், “நான் ஷாலினிக்கு கடமைப்பட்டுள்ளேன். ரேஸிங்கில் பங்கேற்கிறேன்... சண்டை காட்சிகளில் நானே நடிக்கிறேன்... என்னைப் போன்றவனுடன் வாழ்வது எளிதான விஷயமல்ல. ஆனால் ஷாலினி எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இவையெல்லாம் அவரின் துணை இன்றி சாத்தியமாகி இருக்காது.” என்று கூறியிருந்தார். 

இந்த எளிமையான, ஆனால் ஆழமான வார்த்தைகள், அவரது வாழ்க்கையில் ஷாலினிக்கு உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.


அஜித் குமார் மற்றும் ஷாலினி 1999ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது, அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு இணையாக, இவர்களின் காதல் வாழ்க்கையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, இருவரும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

திருமணத்திற்கு பிறகு, ஷாலினி சினிமாவிலிருந்து விலகி, முழுமையாக குடும்பத்தைப் பராமரிக்க முடிவு செய்தார். இதை அஜித் பல முறை பொது மேடைகளில் பெருமையாக குறிப்பிடும் விதம், அவரின் நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement