• Mar 23 2025

கலியாண வீட்டில திருடர்களால் நடந்த குழப்பம்..! மீனாவின் சந்தேகம் உண்மைதான் போலயே...

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்துவ பாத்து கலியாண வீட்டில வந்தவங்க பாஸ் நீங்க தண்ணியடிக்காமலே உங்க மனைவி கிட்ட மாட்டிக்கிட்டீங்கள் அதுக்கு நீங்க பேசாம ரெண்டு ரவுண்ட் அடிச்சிருக்கலாம் என்கிறார்கள். அதுக்கு முத்து அதென்னமோ சரி தான் தப்பு செய்யாம கெட்ட பெயர் வாங்கிறத விட தப்பு செய்திட்டு கெட்ட பெயர் வாங்கலாம் என்கிறான். பிறகு மீனாவப் பாத்து இப்ப தெரியுதா நான் தண்ணி அடிக்கேல என்று எனக் கேக்கிறான்.

அதுக்கு மீனா ஏதோ தெரியாம நீங்க தண்ணி அடிச்சிட்டிங்களோ என்று நினைச்சிட்டன் என்கிறாள். பிறகு முத்து ஒருத்தர் உண்மைய சொன்னா நம்ம மாட்டியா என்று கேக்கிறான். பிறகு மீனாவப் பாத்து யாரு சொல்லி நீ என்மேல சந்தேகப்பட்டனி என்று கேக்கிறான் முத்து. அதுக்கு மீனா உங்க அண்ணா தான் சொன்னாரு என்கிறாள். பிறகு அவன் பாத்த வேலையா இது என்று சொல்லிட்டு மனோஜ தேடுறான்.


அதைத் தொடர்ந்து ரோகிணியும் மனோஜும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்ப முத்து வந்து நான் தண்ணி அடிச்சத பாத்தியா என்று கேக்கிறான். அதுக்கு மனோஜ் கையில போத்திலோட நின்ட அதுதான் அம்மாகிட்ட போய் சொன்னேன் என்கிறான். அப்புடியே ரெண்டு பேரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு கலியாண வீட்ட ரெண்டு திருடர்கள் வந்து நிக்கிறார்கள். பின் அண்ணாமலை கிட்டப் போய் முத்து நான் குடிக்காமலே சிலர் என்னய குடிச்சனான் என்று சொல்லிக் கொண்டு திரியினம் என்கிறான். அதைத் தொடர்ந்து மீனா மனப்பொண்ண வெளிக்கிடுத்திறாள். அதைத் தொடர்ந்து மீனா கலியாண வீட்ட வந்த திருடர்களைப் பார்த்து சந்தேகப்படுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement