• Mar 23 2025

திரைப்படங்களில் பெண்களை இழிவாகக் காட்ட வேண்டாம்...! – இயக்குநர்கள் மீதெழுந்த கண்டனம்!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம், திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் காட்டும் சூழ்நிலைகள் தொடர்பாக தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான சில தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் இடம்பெற்ற சில காட்சிகள் பெண்கள் மீது தவறான பார்வையை ஏற்படுத்துகின்றன எனும் புகார் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்து வருகின்றன. இதை அடுத்து, அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மகளிர் ஆணையம் கடும் எச்சரிக்கையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக சில பாடல்களில் பெண்களைப் பொருட்களாக நினைப்பதை மகளிர் ஆணையம் கடுமையாக கண்டித்து, இது சமுதாயத்தில் ஆண் மற்றும் பெண் சமத்துவத்தையே கேள்விக்குள்ளாக்கின்றது எனக் கூறியுள்ளனர்.


மேலும் “ஒரு பெண்ணை பற்றி எப்படிச் சித்தரிக்க வேண்டும் என்பதை பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கலை சுதந்திரம் என்ற பெயரில் பெண்களின் மரியாதையை பறிக்கும் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு இடமில்லை" எனத் தெரிவித்திருந்தனர்.

சில பாடல்கள் யூடியூப் போன்ற தளங்களில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தாலும், அவற்றின் உள்ளடக்கங்கள் பெண்களை பாலியல் வசப்படுத்தும் நோக்கத்துடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சினிமா துறையின் முக்கியமாக பணியாளர்கள் எனப்படும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் தங்களது பணிகளில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நடனங்களில் மற்றும் பாடல்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும் நடனம், உடைகள், பாடல்வரிகள் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement