• Jan 19 2025

ஷங்கர் படம்னு சொல்லுற அளவுக்கு பிரம்மாண்டம் இல்லையா? ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்ஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசனின் தாறுமாறான நடிப்பில் இன்று ரிலீசான இந்தியன் 2 திரைப்படத்தினை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அலை மோதி வருகிறார்கள்.

இந்த நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 படம் பற்றி மக்கள் சொன்ன கருத்துக்களை பார்ப்போம்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகள் கழித்து மிக பிரமாண்டமாக வெளியான இந்தியன் 2 திரைப்படத்தினை பார்வையிட வந்த ரசிகர்கள் படம் சூப்பராக இருக்கு, முதல் பாகம், இரண்டாம் பாகம் ரொம்ப நல்லாவே இருக்கு, ஷங்கர் வேறமாதிரி செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்கள்.


மேலும் இந்த படம் நிச்சியம் வெற்றிதான், நடிகர் கமலஹாசனின் நடிப்பு மிகவும் அருமை, இந்தியன் படத்தின்  3ம் பாகத்திற்காக  எதிர்பார்க்கிறோம், கஷ்டப்படுகிற ஏழை மக்கள் பார்க்கக்கூடிய நல்ல படம், எல்லாருடைய நடிப்பும் அருமை  எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு மிகவும் பிரமாதம், நடிப்பின் அரக்கன் என அவரையும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

எனினும், இன்னும் சிலர் எதிர் பார்த்த அளவுக்கு படம்  இல்லை, முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்மந்தமே இல்லை, அனிருத் இசை அருமையாக இருந்தது, ஷங்கருடைய படம் என என்னும் அளவுக்கு படம்பிரமாண்டமாக இல்லை எனவும் கூறுகின்றனர். எதுவாக இருப்பின்னும் உலகநாயகன் படம் என்றாலே வேற லெவல் தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தை பார்க்க வந்த நடிகர் பாபி சிம்ஹாவும் திரைப்படம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அதன்படி அவர் கூறுகையில், படம் ரொம்ப சூப்பரா இருக்கும், 28 வருடம் கழித்து இப்போது படம் ரிலீஸ் ஆகி இருக்கு ஷங்கருடைய படைப்பு அருமையாகத்தான் இருக்கும். இந்த படம் ஹிட் தான். கமலஹாசனுடைய ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ட்ரீட்டாக இருக்கும் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement