• Jan 19 2025

ராதிகா போட்ட போடில் ஈஸ்வரி எடுத்த விபரீத முடிவு? கோபியை தேடியோடிய செழியன்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா ஈஸ்வரியை பார்ப்பதற்காக வருகின்றார். இதனால் பாக்கியா ஈஸ்வரி பக்கத்தில் வந்து நிற்க, தான் சண்டை போட வரவில்லை அம்மா செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்க தான் வந்தேன் என்று சொல்லுகின்றார். மேலும் ஈஸ்வரியை பற்றி நலம் விசாரித்து விட்டு, இந்த ஊருக்காக தானே என்னையே படாத பாடு படுத்துனிங்க இப்ப நீங்க அதை அனுபவிக்கிறீங்க என்று ரூட்டை மாத்தி பேசுகின்றார்.

அதன்படி தான் கர்ப்பமாக இருக்கும் போது ஊர் என்ன சொல்லும் என்றீர்கள், கோபியை திருமணம் செய்து கொண்ட போது ஊரை  இழுத்தீர்கள். இப்போது அந்த ஊர் தான் உங்களை வீட்டிற்குள் இருக்குமாறு சொல்லுகின்றது என்று காத்திருந்து பதிலடி கொடுத்து விட்டு செல்கிறார் ராதிகா. இதனால் ஈஸ்வரி எதுவும் பேச முடியாமல் இருக்கின்றார்.

இதை தொடர்ந்து ராதிகா வெளியே போனதும் பாக்யா போய் நல்ல வேலை செய்திருக்கீங்க அவருடைய நிலைமை புரியாமல் இப்படியா பண்றது இதற்கு நீங்க மன்னிப்பு கேட்காமல் இருந்திருக்கலாம் என்று பேச, அவங்களுக்கும் தெரியணும் தானே. எல்லாத்துக்கும் ஊரை இழுத்தவர்கள் இப்போ அதற்கான பலனை அனுபவிக்கின்றார் என்று சொல்கின்றார்.


இதை அடுத்து ஈஸ்வரி சாப்பிடாமல் அதே இடத்தில் இருக்க, பாக்கியா அவரை சாப்பிட வர சொல்லுகின்றார். ஆனால் தான் இனி எங்கேயும் போகப் போவதில்லை. ஒருவருடம் வீட்டுக்குள் தான் இருக்கப் போகின்றேன் என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று சொல்லுகின்றார்.

மறுபக்கம் கோபி கிச்சனில் லாபம் சம்பாதித்திருப்பதாக சந்தோஷப்பட்டு கொண்டிருக்க, அந்த நேரத்தில் செழியன் அங்கு வருகின்றார். தனக்கு வேலை போய் விடுமோ என்று பயந்து சொல்லிக் கொண்டிருக்கின்றார். ஆனால் கோபி வேலை போனா பரவாயில்லை வேறு வேலை எடுக்கலாம் என்று நம்பிக்கை கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement