• Oct 04 2024

பழம்பெரும் வில்லன் நடிகர் உயிரிழப்பு.. பெரும் சோகத்தில் திரைத் துறையினர்..!!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

1988 ஆம் ஆண்டு வெளியான 'மூனம் முறா' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகர் மோகன்ராஜ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் 31 படங்களில் நடித்துள்ளார். 2008க்கு பிறகு இரண்டு மலையாள படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான 'ரோர்சாச்' என்ற படத்தில்  இறுதியாக நடித்துள்ளார். இவர் தனது இருபதாவது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ராணுவத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

அதன்பின், சுங்கத் துறையில் பணியாற்றினார். அப்போதே இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரைத் தேடிச் சென்றுள்ளது. இதனால் சினிமாவில் நடித்துக் கொண்டே பணியாற்றி வந்துள்ளார்.


இந்த நிலையில், 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் மோகன்ராஜ், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து உள்ளார். அவர் மறையும் போது அவருக்கு 70 வயது. தற்போது அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.

வில்லன்  கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திய மோகன் ராஜ், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் ஓராண்டுக்கு மேலாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை அவருடைய இல்லத்தில் நடைபெற உள்ளது. இவருடைய மறைவு மலையாள சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement