• Nov 02 2024

ரோகிணி செய்த காரியத்தால் சுக்குநூறாக உடைந்த முத்துவின் போன்.. சூடுபிடித்த ஆட்டம்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா கொலு வைப்பதற்காக எல்லாத்தையும் ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா சுதா வருகின்றார். விஜயா அவரை ஓடிப்போய் வரவேற்க, வாசுதேவர் வரவில்லையா என கேட்கின்றார். அதற்கு முத்து அருகில் இருக்கும்போதே அவர் வந்தால் இங்கே சில பிரச்சனைகள் வரும் அதனால் வரவில்லை என்று சொல்லுகின்றார். அதற்கு மீனா பதிலடி கொடுக்கின்றார்.

அதன் பின்பு வித்யா கோலாட்டம் ஆடுவதற்காக சாமான்களை வாங்கி வர, இந்த முறை எப்படியாவது முத்துவின் போனில் இருந்து வீடியோவை எடுத்து வர வேண்டுமென ரோகிணி பிளான் பண்ணுகின்றார். 

அது போலவே சிறிது நேரத்தின் பின்பு அனைவரும் கோலாட்டம் ஆடிக் கொண்டிருக்க, சீதா மீனாவையும் அழைத்து ஆடுகின்றார். இதன் போது முத்து போன் எடுக்கின்றார். அதன் பின்பு முத்துவையும் இழுத்து ஆட, சீதா வீடியோவை வாங்கி எடுக்கின்றார். அந்த நேரத்தில் ரோகிணி வித்யாவை போனை வாங்கி வீடியோ எடுக்குமாறு சொல்லுகின்றார்.


அதன்படி அவரும் போனை வாங்கி வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, நைசாக ரோகிணியும் வித்யாவும் கிச்சனுக்கு சென்று  சத்யாவின் வீடியோவை எடுக்க பார்க்கின்றார்கள். ஆனால் அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் எதிர்பாராத விதமாக அவர்களுடன் மோதி போன் கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.

இதனால் வீடியோ எடுக்க முடியாமல் போய்விடுகின்றது. மேலும் தான் போனை செய்து தருவதாக ரோகினி சொல்ல, வேண்டாம் என்று முத்து போனை எடுத்துச் செல்கின்றார். இதனால் அந்த வீடியோ உனக்கு கிடைக்க கூடாது என்று இருக்கு போல என வித்யா சொல்கின்றார்.

மறுநாள் முத்துவும் மீனாவும் கிரிஷ் வீட்டுக்கு செல்கின்றார்கள். அங்கு அவர்களை வீட்டிற்கு வருமாறு அழைக்க முதலில் ரோகினியின் அம்மா தடுமாறுகின்றார். ஆனால் முத்து தொடர்ந்து கேட்டபடியால் சரி என வருவதாக சொல்லுகின்றார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement