• May 18 2026

30 வருட சினிமா வாழ்க்கையில் விக்ரம் சம்பாதித்தது இவ்வளவு தானா? வெளியான சொத்து விபரம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் சியான் விக்ரமின் 58வது பிறந்தநாள் தினம் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை மேலும் அழகூட்டும் வகையில் இன்றைய தினம் தங்கலான் படத்தின் சிறப்பு மேக்கிங் வீடியோ ஒன்றையும் படக் குழுவினர் வெளியிட்டு விக்ரமுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக காணப்பட்டு இன்று 58வது பிறந்த நாளை கொண்டாடும் சியான் விக்ரமின் சொத்து மதிப்பு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.


அதன்படி, தமிழ் சினிமாவில் எந்த கேரக்டராக இருந்தாலும் சிறப்பாக நடிக்கும் விக்ரம் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் காணப்படுகிறார்.


இவர், ஒரு படத்துக்கு ரூ.30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். அவரின் சொத்துக்களில் சென்னையில் ஆடம்பர பங்களா ஒன்றும் உள்ளது. அதன் மதிப்பும் பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

இதுதவிர ஏராளமான சொகுசு கார்களையும் வாங்கி குவித்து வைத்துள்ளாராம். இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement