• Jan 19 2025

பாக்கியலட்சுமி சீரியலில் கர்ப்பமாகும் ராதிகா.. மீண்டும் அப்பாவா? கதி கலங்கும் கோபி! அதகள திருப்பம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் குடும்பப் பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது.

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி, ராதிகாவை திருமணம் பண்ணி பாக்கியா வீட்டிலேயே காணப்படுகிறார். ஆனாலும் தனது திறமையினாலும் விடா முயற்சியாலும் பாக்கியா தற்போது ரெஸ்டாரன்ட் ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகிறார்.

மறுபக்கம் இந்த சீரியலில் தற்போது பழனிச்சாமி, பாக்கியா மீது காதல் கொண்டுள்ளார். இது தொடர்பான பேச்சு வார்த்தையும் பழனி வீட்டில் பேசப்படுகிறது. ஆனால் பாக்யாவுக்கு இது பற்றிய  எண்ணம் இல்லை.


இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் கோபியின் கிச்சனுக்கு சென்ற ராதிகா அங்கு பிரைட் ரைஸ் சாப்பிடுகிறார். அதன் பின்பு ஓடிப்போய் வாந்தி எடுத்துக் கொள்கிறார்.

கோபியின் கிச்சனுக்கு வரும்போது ராதிகா உடம்பு சரியில்லாத மாதிரி தான் காணப்படுகிறார். அதை பற்றி கோபியும் விசாரிக்கிறார். தற்போது ராதிகா வாந்தி எடுப்பதை பார்த்துவிட்டு இது வேறு எதற்கோ வாந்தி எடுத்தது போல இருக்கு, எனக்கு பயமாக இருக்கு என்று கோபியும் சந்தேகப்படுகிறார்.

இதன் மூலம் இந்த சீரியலில் தற்போது ராதிகா கர்ப்பமாக போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னோரு பக்கம் பாக்கியாவை கல்யாணம் பண்ணி வைக்கும் எண்ணத்தில் பழனி வீட்டாரும் காணப்படுகிறார்கள். இனி இந்த சீரியல் எவ்வாறு நகரும் என பொறுத்து இருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement