• Jan 19 2025

பிரியங்கா விவகாரத்தில் பிளாக்மெயில் பண்ணும் விஜய் டிவி நிர்வாகம்? உண்மையை உடைத்த பிரபலம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்  ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியோடு கோமாளிகள் பண்ணும் சேட்டையும் ரசிகர்களை கவர்ந்தது. இதன் காரணத்தினாலே இந்த ஷோ பிரபலமாக காணப்படுகின்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஆரம்பத்தில் இதில் இதுவரை பயணித்து வந்த செப் வெங்கடேஷ் பட் விலகுவதாக அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இதன் காரணத்தினால் ரசிகர்கள் பலரும் குழம்பிப்போய் இனி இந்த சோவை நாங்கள் பார்க்க மாட்டோம் என்ற அளவுக்கு வெறுக்க தொடங்கினார்கள். ஆனாலும் அதற்குப் பிறகு புதிய நடுவர், புதிய போட்டியாளர்கள், புதிய கோமாளிகள் என தடபுடலாக குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மலையாள நடிகையான ஷாலினி சோயா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். அவருடைய கொஞ்சும் தமிழும் மலையாளம் கலந்த பேச்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இவர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் ஆரம்பத்தில் பேசியிருப்பார். அதன் பின்பு தன்னை திருத்திக் கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.


தற்போது இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா - மணிமேகலைக்கு இடையிலான பிரச்சனை இன்றளவில் மட்டும் புகைந்தவாறு உள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பிரியங்கா வாய் திறக்காத நிலையில், இருவருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது  பிரியங்காவுக்கு ஆதரவாக பதிவுகளை போடும்மாறு  விஜய் டிவி கட்டாயப்படுத்துவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் அப்படி இல்லாதவர்கள் பட்டியலிடப்படுவார்கள் விரைவில் அவர்களும் வெளியே போக வேண்டிய சந்தர்ப்பம் உருவாகும் என பிரபலம் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும், மணிமேகலைக்கு நீங்கள் ஆதரவா என்ற வகையில் அவருடைய பேஸ்புக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மணிமேகலைக்கு சப்போர்ட் பண்ணினால் வெளியே விரட்டப்படுவார்கள். பிரியங்காவுக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்றால் வெளியே விரட்டப்படுவார்கள் என்று குறித்த பிரபலம் தெரிவித்து உள்ளார். 

Advertisement

Advertisement