• Jan 19 2025

மாணவர்களை வைத்து அரசியல் செய்கிறார் விஜய்? உண்மையை அடித்து கூறும் பிரபல இயக்குனர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் நடிகர் விஜய், அரசியல் களத்திலும் கால் பதித்து கடந்த சில ஆண்டுகளாகவே களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அதிகார்வ பூர்வமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அதில் விஜயின் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் கட்சியின் தொண்டர்களாகவே மாறினார்கள்.

நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில், இதற்கு அடுத்ததாக தனது 69 ஆவது படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்கள் முடிந்ததற்குப் பிறகு முழு நேரமாகவே அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

இதன் ஒரு கட்டமாக கடந்த வருடம் முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்குவிப்புத் தொகை என்பவற்றை வழங்கி கௌரவித்து வருகிறார். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்த வருடமும் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது விழா நடத்தி சிறப்பித்து இருந்தார் விஜய்.

தற்போது இறுதியாக இடம் பெற்ற கல்வி விருது விழாவில், நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நீட் பற்றிய அறிவு இல்லை என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.


மேலும், கோட் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாநில அரசை ஆதரித்து பேச ஆரம்பித்து விட்டார் என்று விஜய்க்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், விஜய் மாணவர்களை அரசியலுக்கு வரத் தூண்டுகின்றார், மாணவர்களை வைத்து அரசியல் செய்கின்றார் என்ற விமர்சனங்கள் கிளம்பியுள்ள  நிலையில், இயக்குனர் பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் அப்படியெல்லாம் கிடையாது. விஜய் மாணவர்கள் மத்தியில் பேசிய நோக்கம் இதுதான் என விளக்கியுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில்,  10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து விஜய் கௌரவித்திருந்தார். இதில் விஜய் மாணவர்களுக்கான சந்திப்பில் மாணவர்கள் மட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர்களும் விஜய்யுடன் நடந்து கொண்ட விதம்,  மாணவர்களுடன் விஜய் விளையாடிய விதம், குழந்தைகளோடு கொஞ்சி விளையாடிய விதம் என அத்தனை காட்சிகளும்  இணையத்தில்  தீவிரமாக பரவி வருகின்றது. இது பலர் தூக்கத்தையே கெடுத்திருக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு தான் எனது இலக்கு என்று கூறிய விஜய், அதற்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருவதாக கூறுகின்றார்கள். விஜய் தனது சொந்த பணத்தில் தான் மண்டப வாடகை முதல் சாப்பாடு, விருதுக்கான பணம் என அனைத்தையும் செலவு செய்துள்ளார். விஜய் பேசும் போது நமது நாட்டில் நல்ல தலைவர்கள் இல்லை மாணவர்கள் அரசியல் வரவேண்டும் என்றும், எந்த துறையை தேர்வு செய்தாலும் அந்த துறையில் சாதிக்க வேண்டும் எனவும் தான் கூறினார்.

மாணவர்கள் அரசியலையும் கற்றுக் கொள்வதில் எந்த  தவறும் இல்லையே. அரசியலில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தினால் தான் நம் நாட்டிற்கு நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள் என்று தான் விஜய் சொன்னார். மாணவர்கள் தன்னுடைய கட்சியில் வந்து இணைய வேண்டும் என்றெல்லாம் அவர் பேசவில்லை. இவ்வாறு நடந்த உண்மைகளை கூறியுள்ளார் இயக்குனர் பிரவீன்காந்தி.


Advertisement

Advertisement