தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த விஜய், தற்போது தமிழக அரசியலிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், குறுகிய காலத்திலேயே மக்களிடையே மிகப்பெரிய ஆதரவை பெற்று தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தார்.
அரசியலில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட தலைவர்களுக்கே அதிர்ச்சியளிக்கும் வகையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜய், மக்களின் பெரும் ஆதரவால் ஆட்சியை கைப்பற்றியது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
விஜயின் வெற்றிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, தெருக்களில் நடனமாடி மகிழ்ந்தனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விஜய் முதலமைச்சராக வெற்றி பெற்ற பின்னர் அவரது வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத அந்த வீடியோவில், குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் விஜயை வாழ்த்தி மகிழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விஜயை கட்டிப்பிடித்து குடும்பத்தினர் கண்கலங்கிய தருணங்களும், வீட்டில் மகிழ்ச்சியான சூழலில் அனைவரும் ஒன்றாக கொண்டாடிய காட்சிகளும் ரசிகர்களை நெகிழச்செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
UNSEEN: Tamil Nadu CM Joseph VIJAY celebrates his political debut success with his parents. pic.twitter.com/ljzxJv4ueg
Listen News!