• Dec 06 2024

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி பெண் ஹிட்டாரிஸ்ட்டும் விவாகரத்து..! காரணம் இது தானா..?

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist என அறியப்படும் மோகினி டே, தனது கணவர் மார்க் ஹார்ட்சுச்-மிடமிருந்து பிரிவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து மோகினி டே தனது சமூக வலைதளத்தில் ஒரு உருக்கமான செய்தியை பகிர்ந்து கொண்டார். இதில், அவர்கள் இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் இந்த முடிவை எடுத்ததாகவும், வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட முன்னுரிமைகள் மற்றும் இலக்குகள் உள்ளன என்பதால் இதை தாராளமாக ஏற்றுக்கொள்ள முடிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், மோகினி மற்றும் மார்க் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே தொடரவுள்ளதாகவும், MaMoGi மற்றும் Mohini Dey Groups உள்ளிட்ட பல புதிய திட்டங்களில் இணைந்து பணியாற்றுவதை நிறுத்த மாட்டார்கள் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.


மோகினி தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பாசத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து, தனது மற்றும் மார்கின் தனிப்பட்ட முடிவுகளை மதித்து, நியாயமற்ற விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.தமது கருத்தின் இறுதியில்"உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement