• Sep 20 2024

பிரேமம் பட ஹான்ஷம் ஹீரோவா இது ?-ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிப் போயிட்டாரே?

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் நஸ்ரியாவும் நடித்த நேரம் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் நிவின்பாலி. இதனைத் தொடர்ந்த பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் தான் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்துக் கொண்டார். இப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.

இந்தப் படம் நிவின் பாலியின் கேரியரில் தி பெஸ்ட் படமாக அமைந்தது. ரசிகர்களை கவர்ந்த நிவின் பாலி, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் .இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருவதோடு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது மலையாளத்தில் மகாவீர்யர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 21ம் தேதி ரிலீசாக உள்ளதாக முன்னதாக நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். பேன்டசி படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அப்ரிட் ஷைன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெயிலரும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிவின் பாலியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். காரணம் அதிக உடல் எடையுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இவரை வைத்து மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement