• Sep 20 2024

பிரபுதேவா நடிப்பில் வெளியான பொய்க்கால் குதிரை திரைப்படத்திற்கு இப்படி ஒரு நிலையா?- படு மோசமான வசூல் நிலவரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக அறிமுகவாகியவர் தான் பிரபு தேவா. இவர் இதனைத் தொடர்ந்து கதாநாயகனாகும் வாய்ப்புக் கிடைத்ததால் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இது தவிர பல படங்களில் நடன இயக்குநராகவும் வலம் வருகின்றார்.

அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாரி 2 திரைப்படத்தின் பாடலாகிய ரௌடி பேபி பாடலுக்கு நன்றாக இசையமைத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். இது தவிர போக்கிரி வில்லு ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகிய பொய்க்கால் குதிரை படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் படத்தை ஜெயக்குமார் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான படங்களிலேயே மோசமான வசூல் செய்துள்ள படமாக பொய்க்கால் குதிரை திரைப்படம் மாறியுள்ளது.

கடந்த வாரத்தில் இப்போது வரை இந்த படம் வசூலித்த தொகை மிகவும் கம்மி என்று சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து பிரபுதேவாவின் படங்கள் மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதனால் அவரது ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement