• Apr 23 2024

நீண்ட நாட்களுக்குப் பிறகு கணவருடன் ஒன்றாக நிற்கும் ஆல்யா மானசா- அடடே அதற்குள் உடல் எடையைக் குறைத்து விட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் ராஜா ராணி. இதன் முதல் பாகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா மானசா. இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

மேலும் இவர் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் சில காலம் சீரியலில் நடிப்பதைத் தவிர்த்திருந்த இவர் ராஜா ராணி 2 சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

இருப்பினும் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்ததால் குழந்தை பெறும் நேரத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்பொழுது இவருக்கு ஆர்ஸ் என்ற ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்த நிலையில் இவர் எப்போது மீண்டும் சீரியலில் நடிக்க வருவார் என ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் தனது கணவர் சஞ்சீவ்வுடன் எடுத்த லேட்டஸ்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களிடையே லைக்குகள் குவிந்து வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement