• Jun 21 2026

துக்க வீட்டில வீடியோ எடுத்து இப்படியா பண்ணுவீங்க? பாரதிராஜா குறித்து ஜெயராஜ் கொந்தளிப்பு

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்குப் பிறகு அவரது இறுதி சடங்கின் போது நடந்த சில சம்பவங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் அளித்துள்ள விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “கங்கை அமரன் ஒரு ஆதங்கத்தில் தான் சில விஷயங்களைப் பேசினார். பின்னர் அவரே தெரியாமல் பேசி விட்டேன், மன்னித்துவிடுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்ன ஒரு கருத்தை பலரும் பெரிதுபடுத்தி தேவையற்ற சர்ச்சையாக மாற்றிவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், “பாரதிராஜாவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் அவரது மனைவியும் மகளும் தான் முழுமையாக கவனித்துக் கொண்டனர். குடும்பத்தினர் செய்த தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகள் குறித்து வெளியுலகத்துக்கு முழுமையாக தெரியாது.” என்றும் கூறியுள்ளார்.

அதோடு, “மகள்கள் சொத்துக்காக சண்டை போட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது. ஒரு துக்க வீட்டில் நடந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி, அதை பரபரப்பாக்குவது மிகவும் வருத்தமளிக்கும் செயல். குடும்பத்தின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இவ்வாறு நடப்பது சரியல்ல...” என்று ஜெயராஜ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

அவரது இந்த கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.


Advertisement

Advertisement