• Aug 25 2026

மீண்டும் ஏமாற்றிவிட்டாரா நடிகர் யாஷ்! 'டாக்ஸிக்' படக்குழு எடுத்த திடீர் முடிவு..

shali / 2 months ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய பான் இந்திய திரைப்படமான 'டாக்ஸிக்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை பிரபல இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இயக்கி வருகிறார். அத்துடன், அவரது கணவர் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் ரவி பஸ்ரூர் இசையமைத்து வருகிறார். படத்தில் நயன்தாரா , கியாரா அத்வானி , ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


முதலில் கடந்த மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தயாரிப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், அந்த வெளியீடும் தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது 'டாக்ஸிக்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் கதை அம்சத்திலும் பிரம்மாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஒரு பெண் இயக்குநர் இயக்கும் மிகப்பெரிய பான் இந்திய திரைப்படம் என்பதாலும், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


Advertisement

Advertisement