• Jul 05 2026

அஞ்சலி நிகழ்விலும் சர்ச்சையா? ரஜினி குறித்து பரவும் தகவலால் ரசிகர்கள் கொந்தளிப்பு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவை அடுத்து, அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பல திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர். அந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்ட விதம் குறித்து சமூக வலைதளங்களிலும் சில யூடியூப் சேனல்களிலும் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன.

குறிப்பாக, ரஜினிகாந்த் நடிகர் கவுண்டமணியை கண்டுகொள்ளவில்லை என்றும், சிலரிடம் மட்டும் பேசிவிட்டு சென்றார் என்றும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு எதிராக ரசிகர்கள் தரப்பில் வேறு ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறது.

அதன்படி, அஞ்சலி செலுத்த வந்த ரஜினிகாந்த் முதலில் அங்கு இருந்த ராதிகாவிடம் ஆறுதல் தெரிவித்ததோடு, சீமானின் வணக்கத்திற்கும் மரியாதை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், கவுண்டமணி கை நீட்டியபோது ரஜினிகாந்தும் அவருடன் கைகுலுக்கி மரியாதை பரிமாறிக் கொண்டதாகவும் ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அஞ்சலி நிகழ்வில் சீமான் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்பட்டது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. "இதுபோன்ற துயர நிகழ்வுகளில் கருத்து வேறுபாடுகளை தாண்டி மனிதநேயம் தான் முன்னிலையிலிருக்க வேண்டும்" என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல், மறைந்த நடிகர் விஜயகாந்தின் குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் பேசியது குறித்தும் சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவர்கள் முதலில் உரையாடலை தொடங்கிய நிலையில் அதற்கு பதில் அளிப்பது இயல்பான மரியாதை மட்டுமே என்றும் ரசிகர்கள் வாதிடுகின்றனர்.

இதனால், ஒரு இரங்கல் நிகழ்வில் நடந்த சாதாரண மரியாதை பரிமாற்றங்களை தேவையற்ற சர்ச்சைகளாக மாற்ற வேண்டாம் என்ற கருத்து தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Advertisement

Advertisement