• Apr 15 2026

'கர' படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு வில்லனா.? இணையத்தை கலக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

போர் தொழில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது இயக்குநர் திறமையை நிரூபித்த விக்னேஷ் ராஜா, தற்போது தனுஷ் நடிப்பில் 'கர' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சூரஜ் வெஞ்சாரமூடு, கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.


மேலும், நேற்று வெளியான மமிதா பைஜுவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், அவர் சோகமான முகத்தோடு மூலையில் அமர்ந்து அழுதபடி காணப்பட்டார். படத்தில் அவர் 'செல்லி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இதைத் தொடர்ந்து சற்றுமுன் வெளியான சூரஜ் வெஞ்சாரமூடுவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் சூரஜ் 'பரதன்' என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் ஜீப்பில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். இதனால் படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் அழுத்தமான வேடமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் புதிய அப்டேட்களுடன் வெளியாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், 'கர' படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.


Advertisement

Advertisement