தென்னிந்திய சினிமாவில் பலரது கவனத்தைப் பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பல பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
இறுதியாக ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். மேலும் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் ரித்திகா சிங். சிம்பிளாக மட்டும் இல்லாமல் மாடர்ன் உடையும் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிடுவார்.

இந்த நிலையில், ஹார்ட் வொர்க் பண்ணும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் ரித்திகா சிங். அதில் அவருடைய ஹார்ட் வொர்க் பலரது கவனம் ஈர்த்துள்ளது. மேலும் எதற்காக இப்படி ஓவராக ஹார்ட் வொர்க் பண்ணுறாங்க என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
Listen News!