• Oct 16 2024

பிக் பாஸ் 8வது சீசனில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையா? இது புதுசா இருக்கே..!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் கிட்டத்தட்ட மூன்று வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி உயிரிழந்த சோக காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகின்றது. ஆனாலும் இதை பார்க்க முடியாமல் ரசிகர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை கண்ணீர் வடிக்கும் காட்சிகள் பேசு பொருளாக மாறி உள்ளன.

மேலும் ராமமூர்த்திக்கு மகனாக இருந்து கோபி எந்தவித சடங்கையும் செய்ய முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரியும் கோபி எந்த வித சடங்கையும்  செய்யக்கூடாது என ஸ்ட்ரிகாக சொல்லி உள்ளார். இதனால் மகள் நிலையில் இருந்து பாக்கியா தான் ராமமூர்த்திக்கு உரிய கடமைகளை செய்து முடிக்கின்றார்.


இந்த நிலையில், பிக் பாஸ் 8வது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் லிஸ்ட் நிறைய தகவல்கள் மூலம் உலா வந்து கொண்டுள்ளது.

அதன்படி பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடிக்கும் அக்ஷிதா பிக் பாஸ் 8வது சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement