• Apr 30 2026

மீருக்கு தங்கையா.? தம்பியா.? 2வது முறையாக தந்தையான அட்லீயின் லேட்டஸ் கிளிக்ஸ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லி. இவர் சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக தந்தையாக உள்ள செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து அவருடைய மனைவி பிரியாவிற்கு இரண்டாவது வளைகாப்பு நிகழ்ச்சியையும் பிரம்மாண்டமாக நடத்தினார். இதன்போது நடிகர் விஜயும் அதில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இயக்குனர் அட்லி ஒரு சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், அவர் இயக்கிய அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இவர் இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தார். அதற்குப் பின்னர் தற்போது ஷங்கரையே முந்திக்கொள்ளும் அளவிற்கு பான் இந்திய அளவில் இயக்குனராக உயர்ந்துவிட்டார்.

ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, தன்னுடைய முதல் படம் வெளியான சில நாட்களிலேயே தன்னுடைய நீண்டநாள் காதலியான பிரியாவை திருமணம் செய்துகொண்டார்.


அதற்குப் பின்னர் அட்லி இயக்கிய ஜவான் படம் சுமார் ஆயிரம் கோடி வசூலை வாரிக் கொடுத்தது. தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் பான் இந்திய திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் பெரிய திட்டங்கள் தற்போது அவருடைய கைவசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் 2023ஆம் ஆண்டு அட்லிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு 'மீர்' என பெயரிட்டனர். இதையடுத்து இரண்டாவது முறையாக இருவரும் பெற்றோராக இருக்கின்றனர்.

இந்த நிலையில், அட்லி - பிரியா இருவரும் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதோடு, பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement