சூர்யா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இதன் காரணத்தினால் கங்குவா படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் கங்குவா. இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதோடு சுமார் 2000 கோடி வரை வசூலில் கல்லா கட்டும் என இயக்குனர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் கங்குவா படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சூர்யாவின் உழைப்பையும் நடிப்பையும் நிகழ்வில் கலந்துகொண்ட படக் குழுவினர் வெகுவாக பாராட்டி இருந்தார்கள். மேலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் கொடுத்து இருந்தார்கள்.
d_i_a
இந்த நிலையில், கங்குவா படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் படத்தின் அதிகாலை காட்சியான நான்கு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்காக தமிழ்நாட்டு அரசிடம் மனு அளித்திருப்பதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் சூர்யாவின் ரசிகர்கள் காத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!