• Apr 27 2024

பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகின்றதா?- இயக்குநர் பிரவீன் கொடுத்த சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ஆரம்பித்த காலத்திலிருந்து ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல்வேறு விதமான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அதிலும் விஜய் டிவி ஷு தமிழ் சன்டிவி கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கே மவுசு அதிகம்.

தற்போது எல்லா சேனல்களும் போட்டி போட்டுகொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். ஆனால் விஜய் டிவியில் மட்டும் பாரதி கண்ணம்மா தொடர் தான் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.பாரதி கண்ணம்மா எப்போது முடியும் என்று தான் ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.


இந்நிலையில் பாரதி கண்ணம்மா இயக்கி வரும் பிரவீன் பெனட் தற்போது விஜய் டிவிக்காக ஒரு புது சீரியலை இயக்க தொடங்கி இருக்கிறார். அதற்கு "மகாநதி" என பெயர் சூட்டி இருக்கிறார்கள் என தகவல் வந்திருக்கிறது.அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை பதிவிட்டு "Something new" என பிரவீன் பெனட் தெரிவித்து இருக்கிறார். 

இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் முடியப் போகின்றதா? எனக் கேட்டு வருகின்றனர்.அத்தோடு இயக்குநர் பிரவீன் தான் ராஜா ராணி சீசன் 2 சீரியலையும் இயக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement