• Aug 21 2025

சத்தமின்றி தொடங்கிய பயணம்... மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்கள்..

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சமையல் உலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கியவர் மாதம்பட்டி ரங்கராஜ். பாரம்பரிய தமிழ்ச் சமையலை நவீன முறையில் உலகுக்கு அறிமுகப்படுத்திய இவர், குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழகமெங்கும் அறியப்பட்டு, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.


சமையல், நகைச்சுவை என அனைத்தையும் கலந்த ஒரு தனித்துவமான பாணியில் சமையல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வரும் ரங்கராஜின் வாழ்க்கையில், தற்போது ஒரு சந்தோஷமான தொடக்கம் நடந்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் திருமணத்திற்கு பிறகு, இரண்டாவது திருமணமாக ஜாய் கிரிஸில்டா என்பவரை வாழ்க்கைத் துணையாக திருமணம் செய்துகொண்டார். இந்த விவகாரம், தற்போது வரை பெரும்பாலானோருக்குத் தெரியாமலேயே இருந்தது.


சமீபத்தில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தனது கர்ப்பத்தையும், ரங்கராஜுடனான வாழ்க்கைப் பயணத்தையும் பகிர்ந்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டது.

ஜாய் கிரிஸில்டா தனது பதிவில், “சிலவற்றை தெளிவுபடுத்தவே இந்தப் பதிவு. சில பயணங்கள் சத்தமின்றி தொடங்கி, நம்பிக்கையினால் வளரும். அப்படித்தான் நாங்களும் சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவியாக [MRS And MR ரங்கராஜ்] என வாழ்க்கையைத் தொடங்கினோம்.

அன்புடனும் கெளரவத்துடனும் முழு மனதுடனும் பயணத்தை தொடங்கிய நாங்கள், இந்த வருடம் ஒரு குட்டி நபரை வரவேற்க நன்றியுடனும் அன்புடனும் காத்திருக்கிறோம்.” எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement