• Sep 12 2025

"Dame un Gurr.." பாடலுக்கு இப்டி ஒரு டான்ஸா.? கிரணின் மாஸான வீடியோ படுவைரல்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து 2000களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண். இயக்குநர் சரண் இயக்கத்தில், நடிகர் விக்ரம் உடன் இணைந்து நடித்த ‘ஜெமினி’ (2002) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது தொடக்கத்தை ஆரம்பித்த இவர், அதன் பின்னர் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கிறார்.


தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் திரும்பி வந்துள்ளார் கிரண். இவர் சமீபத்தில், "Dame un Gurr..." என்ற ட்ரெண்டிங்கில் உள்ள டாப் பாடலுக்கு தன்னுடைய ஸ்டைலில் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டு, இணையத்தையே கலக்கியுள்ளார்.


கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த வீடியோ, வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. வைரலான வீடியோ இதோ.! 

Advertisement

Advertisement