• Mar 31 2025

குடும்பத்தோடு ஹனிமூன் சென்ற இந்திரஜா! காத்துவாக்குல ரெக்க கட்டி பறந்த ரோபோ சங்கர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. பிரபல டிவி சேனல் ஒன்றில்  சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். மேலும் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானர்.

தனது தாய்மாமனான கார்த்திக் என்பவரைகடந்த 24ம் திகதி  திருமணம் செய்துள்ளார் இந்திரஜா. இவர்களின் திருமணம் மதுரையில்  கோலாகலமாக நடைபெற்றது. திருமண ரிசப்ஷனில்  பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.


அதில் கலந்து கொண்ட நடிகர் சூரி, மணமக்களை வாழ்த்தியதோடு ரோபோ சங்கர், பிரியா தம்பதியினரை தம்பதியினரை 25 ஆண்டுகளாக தெரியும். என் தங்க பிள்ளை.. செல்லப்பிள்ளை என இந்திராஜாவையும் புகழ்ந்து, அவர்களுக்கு வெயிட்டான கிப்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது இந்திரஜாவின் திருமணத்திற்கு பின்னர் முதலாவதாக அவர்கள் செல்லும் ட்ரிப் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்கள்.


இவ்வாறு இந்திரஜா, கார்த்திக் மற்றும் ரோபோ சங்கர் என குடும்பமாக ஒன்றாக செல்வதை பார்த்த ரசிகர்கள், ஹனிமூன் போறீங்களா? இல்ல குடும்பத்தோடு ட்ரிப் போறீங்களா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இவ்வாறு பாட்டி முதல் குழந்தை வரை மொத்தமாக காரில்  செல்வதை பார்த்தால் குடும்பத்துடன் கிளம்பி குலதெய்வ கோவிலுக்கு செல்வது போல தான் தெரிகிறது. காரில் செல்லும்போது ரோபோ சங்கர் காரின் மேல் டூரை திறந்து காத்து வாங்கிக் கொண்டு செல்லும் காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement