• Aug 31 2025

ரச்சிதாவின் லேட்டஸ்ட் லுக் பார்த்தீங்களா? செம கியூட்டா வந்திட்டாங்களே! வைரலான கிளிக்ஸ் இதோ

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்த நடிகை ரச்சிதா மஹாலட்சுமி, தற்போது தனது புதிய புகைப்படங்கள் மூலம் மீண்டும் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு Food Festival நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.


ரச்சிதா மஹாலட்சுமி தமிழ்த் தொலைக்காட்சி உலகில் ஒரு முக்கியமான பெயராகத் திகழ்கிறார்.  'சரவணன் மீனாட்சி' என்ற வெற்றி சீரியலில் நடித்து, குடும்ப பெண்களிடம் மிகவும் பிரபலமானார்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதைக் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து, ரச்சிதா தனது திரைபயணத்தை 'Fire' என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இந்தப் படத்தில் அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சவாலானதுமாக இருந்தது.


இது ரசிகர்களிடையே புதிய ரச்சிதாவை அறிமுகப்படுத்தியது. ‘Fire’ படத்திற்கு கிடைத்த விமர்சன வரவேற்பு, அவரது நடிப்புத்திறனை மேலும் வலுப்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பிரபலமான Food Festival நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரச்சிதா. பல வகையான உணவுகள் காணப்பட்ட இந்த நிகழ்வில், ரச்சிதா தனது அழகிய உடையிலும், அற்புதமான ஸ்மைலில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்துள்ளார். வைரலான போட்டோஸ் இதோ.!


Advertisement

Advertisement