• Apr 30 2024

'மீனாவைப் பார்த்தால் கொன்று விடலாம் என்று தான் தோன்றும்'- கடும் கோபத்தில் பேசிய பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது கண் அழகு மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.

அத்தோடு இவர் அன்புடன் ரஜினிகாந்த் என்னும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் ரஜினியுடன் கிட்டத்தட்ட மூன்று திரைப்படங்களுக்கு மேலாக ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவருடைய கணவரான வித்யாசாகர் கடந்த சில வாரங்களுக்கு முதல் புற்று நோய் காரணமாக இறப்புக்குள்ளானார். இந்த நிலையில் மீனா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மீனா பல திரைப்படங்கள் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

இதனைப் பார்த்த பிரபல நடிகை கடுப்பாகியுள்ளாராம். அதாவது ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகை தான் சோனியா போஸ். இவர் போஸ் வெங்கடேசன் மனைவி ஆவார்.இவரும் ரஜினியின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

அந்த வகையில் இவர் கூறியதாவது திரைப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தில் மீனா ரஜினியின் காட்சிகள் தான் அதிகமாக வரும் எனக்கு ரஜினியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த பல நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு அழகு உண்டு அந்த வகையில் நமது நடிகைக்கு அவருடைய கண்கள் தான் அழகு அந்த வகையில் தன்னுடைய கண்களால் ரசிகர்களை வசியம் செய்யும் வித்தைகளை கற்றுக் கொண்டவர்.இதனால் மீனாவை பார்க்கும் போதெல்லாம் கொன்று விடலாமா என்ற எண்ணம் எனக்கு எழுந்தது உண்மைதான். எனக்கு பிடித்த நடிகர் உடன் இவர் சேர்ந்து நடிக்கிறாரே என்ற கோபம் எனக்கு ஆரம்பத்திலிருந்து இருக்கிறது என்பதை வெளிப்படையாக பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement