• Apr 30 2024

விஜய்தேவர்கொண்டாவுடன் டேட்டிங் செய்ய எனக்கு ஓகே-காதல் வலையில் சிக்கிய பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் உள்ள டாப் ஹீரோயின்களில் முக்கியமானவர் தான் நடிகர் விஜய்தேவர் கொண்டா. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.இவருக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்கள் அதிகம்.

இவர் நடிப்பில் தற்பொழுது லிகர் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.இப்படம் ஆகஸ்ட் மாதம் இந்த படம் ரிலீசாக உள்ளது.இப்படம் பான் இந்தியத் திரைப்படமாக ரிலீஸாகவுள்ளது.

பாலிவுட்டில் பிரபலமான டிவி நிகழ்ச்சிகளில் ஒன்று காஃபி வித் கரன்.இந்த நிகழ்ச்சியை டைரக்டர் கரன் ஜோகர் நடத்தி வருகிறார்.சமீபத்தில் நடந்த எப்பிசோடில் சிறப்பு விருந்தினராக சாரா அலி கான், ஜான்வி கபுர் இருவரும் கலந்து கொண்டனர்.

இதில் கரன், சாரா, இன்றைய தேதியில் யாருடன் டேட்டிங் செய்ய நீங்க விரும்புகிறீர்கள் என கேட்டார். முதலில் இதற்கு பதிலளிக்க மறுத்த சாரா அலி கான். பிறகு விஜய் தேவர்கொண்டா என பதிலளித்தார்.விஜய் தேவர்கொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, நீங்கள் தேவர்கொண்டா என்பதை சொல்லி விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. செம க்யூட். பெரிய ஹக் மற்றும் எனது அஃபெக்ஷன் உடன் என குறிப்பிட்டு ஹார்ட் எமோஜியை பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement