• Jan 19 2025

இன்று முதல் சன் டிவியில் ‘மல்லி’ சீரியல்.. இவ்வளவு பிரபலங்கள் நடிக்கிறார்களா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் இன்று முதல் ‘மல்லி’ சீரியல் தொடங்க இருக்கிறது என்பதும் கடந்த சில நாட்களாக இந்த சீரியலின் முன்னோட்ட வீடியோக்கள் அசத்தலாக இருந்த நிலையில் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மெகா தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்தது

 சரிகம நிறுவனம் தயாரித்து உள்ள இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம். வெங்கடேஷ் விஜய் இந்த சீரியலின் நாயகனாக நடிக்கிறார் என்பதும் மனைவியை இழந்து ஒரு மகள் வைத்திருக்கும் கேரக்டரில் இவர் நடிக்கிறார் என்பது சீரியல் முன்னோட்டம் வீடியோவில் இருந்து தெரியவருகிறது



இதனை அடுத்து இந்த சீரியலில் மல்லி என்ற டைட்டில் கேரக்டரில் நாயகியாக நிகிதா நடிக்கிறார்.  மேலும் இந்த சீரியலில் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நளினி ஆகிய இரண்டு சீனியர் நடிகைகள் நடிக்க இருக்கும் நிலையில் நடிகை கிரேஸி இந்த சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் அடிக்கிறார்.

மேலும் ’பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடித்த நடிகை கிருத்திகாவும் இந்த சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதேபோல் குழந்தை நட்சத்திரமான பேபி ரகிலா, ஹீரோ மகளாக வெண்பா என்ற கேரக்டரில்  நடிக்கிறார். அதேபோல் மற்றொரு குழந்தை நட்சத்திரம் நிதிஷ் இந்த சீரியலில் நடிக்கிறார்.

மேலும் ’வித்யா நம்பர் ஒன்’ சீரியலில் நடித்த நிரஞ்சனா அனைவரும் இந்த சீரியலில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் ’தவமாய் தவமிருந்து’ சீரியலில் நடித்த ரோகித் என்பவர்,  வெங்கட் என்பவர் சில முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளார்



மேலும் இந்த சீரியலில் வில்லியாக நிஷாந்த் கபூர் என்பவர் நடிக்கவுள்ளார். ’நீதானே என் பொன்வசந்தம்’ சீரியலில் நடித்த சாய்ராம், ’ஆடுகளம்’ சீரியலில் நடித்த அக்ஷயா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும்  இன்னும் சின்னச் சின்ன கேரக்டர்களில் பலர் நடிக்கவிருக்கும் நிலையில் அதுகுறித்த தகவல்களை விரைவில் பார்ப்போம்.

Advertisement

Advertisement