• Jan 19 2025

ஷோபனா ரொம்ப ஸ்பெஷல்... தாய் கிழவிக்கு நன்றி சொன்ன தனுஷ்... நெகிழ்ச்சியான டுவிட் பதிவு...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

2022 -ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தினை பெற்ற திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த நாடகத் திரைப்படமாக வெளிவந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ், நித்யாமேனன், ப்ரியபவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல நச்சத்திரங்கள் நடித்திருந்தனர். 


தனது உயிர் தோழியை காதலித்து தனுஷ் இந்த படத்தில் திருமணம் செய்து கொள்வார். இந்த படம் வாழ்க்கையுடன் இணைவதால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக நித்திய மேனனனை குறிப்பிட்டு தாய் கிழவி என வரும் கலாட்டாவான நகைச்சுவை பாடல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.


இதை தொடர்ந்து, தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருதுகள் கிடைத்துள்ளது. அதை குறித்து நடிகர் தனுஷ் ஒரு நெகிழ்ச்சி பதிவை தன் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு படத்திற்காக ஹீரோவும், ஹீரோயினும் இணைந்து ஒரே நேரத்தில் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதை பெறுவது என்பது பெரிய விஷயம் எனவும், திருவும், ஷோபனாவும் ரொம்ப ஸ்பெஷல் என்றும், திருவை அழகாக காட்டியதற்கு மிகவும் நன்றி ஷோபனா என்றும் பதிவிட்டுள்ளார் நடிகர் தனுஷ். 


Advertisement

Advertisement